திருக்குறள் #56
குறள்
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
குறள் விளக்கம்
கற்புநெறியில் வழுவாது, தனது உடலைப் புனிதமாகக் கருதிப் பாதுகாத்து (அல்லது புலனடக்கத்தினால் தன்னை, தன்னுடலைப் பாதுகாத்து) அறநெறிப்படி தன் கைக்கொண்டவனுக்குப் பணிவிடை செய்து போற்றிப் பாதுகாத்து, இல்லற வாழ்க்கைக்குரிய அறங்களைப் பெரியோர்கள் பகர்ந்த வண்ணம் நன்கு கடைப்பிடித்து, தளர்ச்சியுற்று கடமைகளை மறவாமல் மனைவியானவள் திகழ வேண்டும். (மனைவிக்குரிய மாண்புகள் அதாவது நற்பண்புகள், நற்செய்கைகள் யாவை என மிக சுருக்கமாகப் பகரப்பட்டது).
குறள் விளக்கம் - ஒலி