திருக்குறள் #54
குறள்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்?
திண்மைஉண் டாகப் பெறின்?
குறள் விளக்கம்
அறநெறிப்படி தன் கைப்பற்றிய ஆண்மகனாகிய கணவனைத் தவிர வேறு எந்த ஆண்மகனையும் புலனின்பத்தின் பொருட்டு விரும்பாத உயர்ந்த அறநெறிப்பண்பு என்பதாகிய உள்ள உறுதி (தெய்வீக அருளோடு கூடிய தூய அறிவாற்றலால் பண்படுத்திக் கொண்ட கலங்காத, முறையான முயற்சியின் மூலம்) பெற்றுவிடுவாளேயானால் அப்பெண்ணைக் காட்டிலும் (அத்தகைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனுக்கு) பெருமைக்குரியது அல்லது பெறத்தக்கது அல்லது வாழ்க்கையில் மேலும் அடைய வேண்டியது வேறு என்ன இருக்கிறது! (இதனைக் காட்டிலும் அடைய வேண்டியது வேறு ஒன்றுமில்லை என்பது கருத்து).
குறள் விளக்கம் - ஒலி