குறள்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்
குறள் விளக்கம்
இல்லத்தை ஆளுகின்ற மனைவியிடத்து குடும்ப வாழ்க்கைக்குரிய அறிஞர்களால் மதிக்கப்படும் நல்லெண்ணம், நற்செயல்கள் இல்லையானால் இல்லற வாழ்க்கையானது, கணவன் எத்தகைய அறிவு, செல்வம், பண்புகள், நற்செயல்கள் உடையவனாக இருந்தாலும் பாபங்கள் மிகுந்து பயனற்றதாகிவிடும்.