குறள்
மனைத்தக்க மாண்புஉடையவள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
குறள் விளக்கம்
வீட்டிலிருந்து கடைப்பிடிக்கப்படும் அறத்திற்குரிய நற்பண்புகள், நற்செயல்கள் உடையவளாகத் தன்னை ஆக்கிக் கொண்டு, தன்னை அறநெறிப்படி கைக்கொண்டவனுடைய வருவாய்க்குத் தகுந்த (வகையில் குடும்பத்தை நடத்துபவளாக) அறனெனப்பட்ட இல்வாழ்க்கைக்குத் துணைபுரிய வேண்டும்.