Kural

திருக்குறள் #49
குறள்
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று
குறள் விளக்கம்
மனையில் மனைவியுடன் அறவழியில் இணைந்து வாழும் வாழ்க்கைதான், இல்லறம், துறவறம் இரண்டினுள் பெரியோர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. பிறரால் (அறிஞர்களால்) குற்றம் காணப்படுகின்ற தன்மை இல்லாததாக இருக்குமாயின் அதுவும் (குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாத துறவு வாழ்க்கையும்) சிறப்புடையதாகும்.
குறள் விளக்கம் - ஒலி