Kural

திருக்குறள் #461
குறள்
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
குறள் விளக்கம்
ஒரு செயலைச் செய்ய முற்படும்போது செல்வவளம், மனிதவளம், காலம் இவைகளினால், அதற்கு ஆகும் செலவையும், வரவையும் நோக்குவதோடு வருங்காலத்தில் அதனால் ஏற்படும் இலாபத்தையும் சீர்தூக்கிப்பார்த்து செயல்படவேண்டும்.