குறள்
தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
குறள் விளக்கம்
அறிவும் அநுபவமும் உடைய பெரியவர்களோடு (செய்யத்தகுந்த செயலை) ஆராய்ந்து, தானும் சிந்தித்துப் பார்த்துச் செய்பவர்களுக்கு அடையமுடியாத பொருள் (செய்ய முடியாத செயல்) எதுவும் இல்லை. (ஒப்பிடுக 677 வது குறள்)