குறள்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
குறள் விளக்கம்
அமைதியாக வாழ்வதற்கு அறத்தைத் துணையாகக் கொண்டு வாழ்கின்ற கணவனாகிய துணைவனும், மனைவியாகிய துணைவியும் இணைந்து வாழும் குடும்ப வாழ்க்கை, அவர்களுக்குள் அறிவுப்பூர்வமான அன்புடையதாகவும், விருப்பு வெறுப்பற்ற சீரிய வாழ்க்கை நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவதாகவும் உடையதாக இருக்குமானால் அத்தகைய சீரிய வாழ்க்கையே குடும்ப வாழ்க்கையின் சிறப்பும் பயனும் ஆகும். (அதுவே உயிரோட்டமுள்ள நிறைவான வாழ்க்கையாகும்).