குறள்
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
குறள் விளக்கம்
பணம் ஸம்பாதிக்கும் போது பாபத்திற்குப் பயந்து பணத்தை ஸம்பாதித்து, தர்மமாக வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளித்து உணவு உண்பவன் தனக்குத் தேவையானவற்றையும் வைத்துக் கொண்டு, குடும்ப வாழ்க்கையை உடையவனாக இருப்பானாகின் (நடத்துவானானால்) அவனது குழந்தைகள் (வம்சம்) ஒருபொழுதும் இறத்தல் (துன்பப்பட்டு வருந்தி போவது என்பது) இல்லவே இல்லை. (என்றும் துன்பப்படாமல் நீண்டநாள் இன்பமாக வாழ்வார்கள் என்பது கருத்து).