Kural

திருக்குறள் #237
குறள்
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
குறள் விளக்கம்
(தமக்குப்) புகழுண்டாகும் வண்ணம் வாழ முயலாதவர் தன்குறையை வெறுத்துத் தன்னைத் திருத்திக்கொள்ளாமல் தன்னை இகழ்பவரை வெறுப்பது ஏன்!