குறள்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
குறள் விளக்கம்
(உயிர் மனித உடலில்) தோன்றினால் (அறத்தைக் கடைப்பிடிப்பதால் தோன்றும்) புகழுக்காகத் தோன்றட்டும். அதற்காக இல்லையாயின் (புகழுக்காக உயிர் மனித உடலில்) தோன்றுவதைக் காட்டிலும் தோன்றாமலிருப்பது (விலங்கு உடலில் தோன்றுவது) சாலச்சிறந்தது.