குறள்
வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்
குறள் விளக்கம்
உலக மக்கள் அனைவரும் புகழ் என்கின்ற (வாழ்க்கைப்)பயனை பெறவில்லையானால், (அறத்தைக் கடைப்பிடித்து புகழை அடையாத அந்த வாழ்க்கை), வாழ்க்கையின் மதிப்பை இகழ்ந்ததாகும் (என அறிஞர்) கூறுவர்.