குறள்
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
குறள் விளக்கம்
உலக நடைக்கேற்ற அறங்களை அறிந்து (மற்றவர்களுக்கு உதவி புரிந்து வாழ்கின்றவனே) உயிருக்குக் கிடைத்த மனித உடலை பயன்படுத்தி வாழ்பவனாக ஆவான். இதற்கு நேர்மாறானவன் (வாழ்ந்து கொண்டிருந்தாலும்) உயிரற்ற பிணத்திற்கு நிகராக கருதப்படுவான்.