குறள்
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற
குறள் விளக்கம்
(தகுதியுள்ளவர்களுக்கு) உடலாலும், பொருளாலும் உதவி செய்வதைக்காட்டிலும் வேறு நல்ல (செயல்களை) (செய்யும்) வாய்ப்பைப் பெறுவது இம்மண்ணுலகத்திலும் (வானுறையும்) தெய்வ உலகத்திலும் அரிதாகும்.