குறள்
ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
குறள் விளக்கம்
தன்னை இகழ்ந்து அவமதிப்பவர் பின்னால் சென்று (அவரிடத்தில் பொருளைப் பெற்று) உயிர்வாழ்வதைக் காட்டிலும் தன்னை இகழ்பவரிடம் செல்லாமல் (அவரிடத்தில் பொருளைப் பெறாமல்) அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.