Kural

திருக்குறள் #965
குறள்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
குறள் விளக்கம்
(குடிப்பிறப்பால்) மலைக்கு நிகராக (உயர்ந்த நிலையில் உள்ளவரும்) குன்றிமணி அளவுக்குத் தாழ்வடைவதற்குக் காரணமான செயல்களைச் செய்தால் தாழ்வை அடைவர்.