குறள்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
குறள் விளக்கம்
(மருத்துவர்) நோயைக் குறிகளால் அறிந்து நோயின் காரணத்தை அறிந்து அந்நோயைப் போக்குகின்ற வழிமுறையை அறிந்து உடலுக்குப் பொருந்தும்படியான உரிய வழிமுறையினைப் பிழையின்றிச் செய்ய வேண்டும்.