குறள்
அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
குறள் விளக்கம்
(ஒருவன்) அஞ்சக்கூடாததாகிய போருக்கு அஞ்சுபவனாகவும் போர் செய்யும் வகைகளைப் பற்றி அறியாதவனாகவும் போர் செய்வதற்கு வேண்டிய தளவாடங்களை அமைத்துக்கொள்ளாதவனாகவும் பிறருக்குப் பொருளை வாரி வழங்காதவனாகவும் (இருந்தால்) (அவன்) பகைவர்களிடம் தஞ்சமடையக்கூடிய எளியவனாவான்.