குறள்
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு
குறள் விளக்கம்
தன் உள்ளத்தில் பகைமை தோன்றிய மாத்திரத்தில், அந்தப் பகைமைக்கு இடம் கொடுக்காமல் சாய்ந்து நடத்தல் வளர்ச்சியைக் (கொடுக்கும்). அந்தப் பகைமையை மேலும் மேலும் வளர்ப்பதற்கு, எண்ணி முயற்சித்தால், துன்பமானது தன்னிடத்தில் நெருங்கி வரும்.