Kural

திருக்குறள் #837
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
குறள் விளக்கம்
அறிவிலியானவன், பெரிய செல்வத்தை வினைப்பயனால் அடைவானேயானால் அவனுடன் ஒரு தொடர்புமில்லாதவர், பலவிதமான நன்மைகளையும் பெறுவர். அவனுடன் தொடர்புடையவர், ஒரு நன்மையும் அடையாமல் துன்புறுவர்.
குறள் விளக்கம் - ஒலி