Kural

திருக்குறள் #82
குறள்
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று
குறள் விளக்கம்
விருந்தினர் தன் வீட்டின் வெளியே இருக்கும்பொழுது (உண்ணப்படும் பொருள்) இறப்பைத் தவிர்க்கும் அமுதம் ஆயினும், தானே (அவ்வமுதத்தை) உண்ணுதலை விரும்பலாகாது.