குறள்
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு
குறள் விளக்கம்
(காட்டிற்குச் செல்லாமல்) மனைவியுடன் வீட்டில் இருந்துகொண்டு (பொருள்களைப்) பாதுகாத்து வாழ்வதற்கான செயல்கள் அனைத்தும் விருந்தினரை அன்புடன் உபசரித்து (அவ்விருந்தினருக்கு) உதவியினைச் செய்வதற்காகவேயாம்.