Kural

திருக்குறள் #811
குறள்
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
குறள் விளக்கம்
தோற்றத்தாலும் பேச்சாலும் தன்னை மயக்கக்கூடியவராக இருந்தாலும், நற்குணமில்லாத தீய குணமுடையாரது நட்பானது, நாளுக்கு நாள் வளர்வதக் காட்டிலும், குறைந்துவிடுவதே நல்லதாகும்.