Kural

திருக்குறள் #808
குறள்
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
குறள் விளக்கம்
நண்பர் உரிமையார்ச் செய்த பிழையை, தானும் பொருட்படுத்தாமல், பிறர் சொன்னாலும் கேட்காமல், அதனைப் பொறுக்கும் வல்லமை படைத்தவர்க்கு, அந்நட்பினர் பணியாமை முதலான பிழையைச் செய்வாராயின், அது பிழைபொறுப்பவர்க்கு பயனுடைய நன்னாளாகும்.