குறள்
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
குறள் விளக்கம்
தன்னிடம் நட்பு கொண்ட ஒருவன் அழிவினைத் தருகின்ற தீய வழிகளில் சென்றால் அவற்றிலிருந்து அவனை விலக்கி மற்ற நல்ல வழிகளில் வழிநடத்தி அவனுக்கு ஊழ்வினையினால் நீக்க முடியாத பெரும் துன்பம் வரும்பொழுது அப்பெரும் துன்பத்தை அவனுடனிருந்து அனுபவிப்பதே நட்பு எனப்படும்.