Kural

திருக்குறள் #774
குறள்
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
குறள் விளக்கம்
தன் கையில் இருந்த வேலினை தன்னைத்தாக்க வந்த யானை மீது எறிந்துவிட்டு தன்னைத்தாக்க வருகின்ற அடுத்த யானைக்கு வேல்தேடித் திரிந்து வருபவன் தன்மேல் வீசப்பட்டு மார்பில் பதிந்திருந்த வேலைக்கண்டு அதனைப் பிடுங்கி எடுத்து மகிழ்ச்சியடைவான்.