குறள்
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
குறள் விளக்கம்
காட்டினிலே அஞ்சி ஓடுகின்ற முயலின் மீது குறிதவறாது எய்கின்ற அம்பைக் கையில் ஏந்துவதை விட வெளிநிலத்தில் நின்ற யானையின் மீது எறிந்து குறிதவரிப்போன வேலை ஏந்துவது வீரனுக்கு இனிமையானதாகும்.