Kural

திருக்குறள் #770
குறள்
நிலைமக்கள் சாலவிடைத் தெனினுந் தானை
தலைமக்கள் இல்வழி இல்
குறள் விளக்கம்
போரில் அஞ்சாது நிலைத்து நிற்கும் வீரர்கள் மிகவும் அதிகமாக இருந்தாலும் தனது படையை வழி நடத்திச் செல்லும் தலைவர்கள் அமையவில்லையென்றால் அந்தப் படையானது பயன்படாது.