குறள்
இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
குறள் விளக்கம்
சொற்களின் இயல்பினை ஆராய்ந்து அறிந்து பயன்படுத்தத் தெரிந்த நல்லறிவினை உடையவர் சபையில் ஒரு கருத்தைச் சொல்லும் முன், அச்சபையிலுள்ளோர் தனது கருத்தை விருப்பமுடன் கேட்கின்றார்களா என ஆராய்ந்து அறிந்து தனது சொல்லில் பொருட்குற்றமும் சொல்குற்றமும் ஏற்படாவண்ணம் தெளிவாக உணர்ந்து சொல்ல வேண்டும்.