Kural

திருக்குறள் #706
குறள்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
குறள் விளக்கம்
தனக்கு அடுத்து இருக்கின்ற பொருளின் நிறத்தை தன்னிடம் வெளிப்படுத்துகின்ற பளிங்கினைப் போல ஒருவனுடைய மனதினிலே மேலோங்கி இருக்கின்ற எண்ணத்தை அவனுடைய முகத்தின் தோற்றமே வெளிப்படுத்திவிடும்.