Kural

திருக்குறள் #703
குறள்
குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்
குறள் விளக்கம்
தனக்கு ஏற்படும் குறிப்பின் தன்மையை நன்கு ஆராய்ந்து அக்குறிப்பினால், மற்றவர்களின் குறிப்பை அறிந்து கொள்ளும் திறமையுள்ளவரை அரசர் தம்மிடமுள்ள பொருள், பதவி, படை முதலிய அங்கங்களில் அவர் விரும்பும் எந்த ஒன்றைக் கொடுத்தாவது, தனக்குத் துணையாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.