Kural

திருக்குறள் #687
குறள்
கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
குறள் விளக்கம்
வேற்று வேந்தனிடம் தான் சொல்ல வேண்டிய முறையை நன்கு அறிந்து அவ்வேற்றரசனது காலத்தையும் கருத்தில்கொண்டு சென்ற காரியம் கைகூடக்கூடிய இடத்தையும் அறிந்துகொண்டு தன் நிலையையும் மாற்றான் நிலையையும் ஆராய்ந்து அறிந்து சொல்பவனே தூதருள் தலை சிறந்தவன்.