Kural

திருக்குறள் #685
குறள்
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது
குறள் விளக்கம்
வேற்றரசர்க்குப் பல விஷயங்களைப் பகரும் பொழுது அவற்றை ஒழுங்காகக் கோர்த்துச் சொல்லியும் கடினமான விஷயங்களைச் சொல்லும்போது பயனற்ற சொற்களை நீக்கியும் இனிமையான சொற்களால் மாற்றான் மனம் மகிழும்படிச் சொல்லியும் தன்னரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே தூதுவனாவான்.