குறள்
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு
குறள் விளக்கம்
வேலினை ஏந்திய வேற்று வேந்தனிடம் சென்று, தன் வேந்தனுக்கு வெற்றியை அளிக்கின்ற காரியத்தை, எடுத்துரைக்கும் தூதுவனுக்கு இருக்க வேண்டிய தகுதியானது, நீதி நூலை அறிந்த அறிஞர்களைக் காட்டிலும் நீதி நூலை நன்கு அறிந்த திறமையுடையவனாக விளங்குவதாகும்.