குறள்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சுஆணி அன்னார் உடைத்து
குறள் விளக்கம்
இந்த உலகமானது உருளைகளையுடைய சக்கரம் உள்ள பெரிய தேருக்கு அச்சிலுள்ள சிறிய கடையாணி போன்ற செயல் திறமையுடையவரை உடையது. (எனவே) (சிறிய) உருவத்தைப் பார்த்து இகழாமல் (நடந்து கொள்ள) வேண்டும்.