Kural

திருக்குறள் #655
குறள்
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று
குறள் விளக்கம்
தான் இந்தச் செயலைச் செய்து விட்டேனே என்று பின்னால் வருந்தக்கூடிய செயல்களை ஒருபொழுதும் செய்யாதிருக்க வேண்டும். ஒருவேளை, தவறாக அப்படிச் செய்ய நேர்ந்தாலும் அதற்குப் பிறகு அதை நினைத்து வருந்தாமல், மீண்டும் அச்செயலைச் செய்யாமலிருத்தல் நலமுடையதாகும்.