Kural

திருக்குறள் #654
குறள்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
குறள் விளக்கம்
உறுதியான உள்ளம் கொண்ட, தெளிவான அறிவுடையவர்கள் தாம் துன்பத்திலேயே மூழ்க நேர்ந்தாலும் அதை நீக்கும் பொருட்டு இழிவான செயல் ஒன்றையும் செய்யமாட்டார்கள்.