குறள்
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
குறள் விளக்கம்
தனது வறுமையின் காரணமாக தன்னைப் பெற்ற தாயினுடைய பசியைக் கண்டு வருந்தும் சூழ்நிலை ஒருவனுக்கு ஏற்படினும் அவருக்கு உணவு கொடுக்கும் பொருட்டு அறிவில் சிறந்த நல்லோர் பழிக்கக்கூடிய தீய செயல்களை அவன் செய்யாதிருக்க வேண்டும்.