குறள்
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
குறள் விளக்கம்
தான் எண்ணிய காரியங்களை பிறர்க்கு ஏற்பச் சொல்லுவதில் வல்லவனாய் சொல்ல வேண்டியதை மறதியில்லாமல் சோர்வின்றி சொல்பவனாய் சபையில் அஞ்சாமல் சொல்லவல்லவனாய் உள்ள இம்மூன்று குணமுடைய அவனை பகைமை கொண்டு பிரித்தும் சேர்த்தும் வெல்லுதல் என்பது எப்படிப்பட்டவருக்கும் இயலாது.