Kural

திருக்குறள் #643
குறள்
கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
குறள் விளக்கம்
தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களைத் தன்வயப்படுத்தும் குணங்களை உடையவராய் பகையினால் தன் பேச்சைக் கேட்க விரும்பாதவரும் பகையை நீக்கி, தான் சொல்வதைக் கேட்க விரும்பும் வண்ணம் பேசும் ஆற்றலே சொல்வன்மையாம்.
குறள் விளக்கம் - ஒலி