Kural

திருக்குறள் #634
குறள்
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு
குறள் விளக்கம்
பல்வேறு வகையான வழிமுறைகளை ஆராய்ந்து அறிந்து தெளிதலும், எந்த செயல்புரிந்தால் சிறந்த பயன் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அறிந்து செய்தலும், குழப்பமில்லாது தெளிந்த உறுதியுடன் பேசுதலும் ஆகிய திறமைகள் உள்ளவனே அமைச்சனாவதற்குப் பொருத்தமான தகுதியுடையவன்.