குறள்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
குறள் விளக்கம்
ஐந்து பொறிகளின் (இந்திரியங்களின்) வாயில்களின் வழியாகச் (செல்லும் ஆசைகள்) அற்ற இறைவனுடைய பொய்மையற்ற (மெய்யான மறை நூல்கள் கூறும்) ஒழுக்க நெறியில் (ஆசாரப்படி) வழுவாமல் நிலைத்திருப்பவர்கள் எப்பொழுதும் (மகிழ்ச்சியுடன்) வாழ்வார்கள்.