Kural

திருக்குறள் #591
குறள்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்
உடையது உடையரோ மற்று
குறள் விளக்கம்
ஒருவரை உடையவர் என்று சொல்லுதற்குச் சிறந்தது, இதனை இவர் உடையவர் என்று சிறப்பித்துச் சொல்லத்தக்கது ஊக்கமேயாகும். அம்மனவெழுச்சி இல்லாதவர் அவ்வூக்கம் இல்லாதவர் வேறு எந்தப் பொருளை உடையவரானாலும் உடையவராவாரோ? ஆகமாட்டார் என்பது கருத்து.