Kural

திருக்குறள் #491
குறள்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது
குறள் விளக்கம்
பகைவரை வெல்லுவதற்கு நன்கு சரியான ஓர் இடத்தைப் பார்த்து முடிவு செய்த பிறகு அல்லாமல் எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம். பகைவரை இகழவும் வேண்டாம்.