Kural

திருக்குறள் #463
குறள்
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
குறள் விளக்கம்
அறிவுடையவர்கள் பின்வரும் இலாபத்தை எண்ணி முன்பே அடையப்பெற்றுள்ள முதலையும் இழப்பதற்குக் காரணமான செயலை மேற்கொள்ளமாட்டார்கள்.