குறள்
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
குறள் விளக்கம்
உலகத்தாரால் இகழப்படும் இகழ்ச்சி என்கின்ற குறைபாட்டை உணர்ந்து அச்சப்படுபவர், பெரியோருடன் ஆராய்ந்தும் தானும் சிந்தித்துப் பார்த்தும் தெளிவில்லாத செயலைத் தொடங்கவே மாட்டார்கள்.