Kural

திருக்குறள் #452
குறள்
நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு
குறள் விளக்கம்
தண்ணீர் தான்சேர்ந்த நிலத்தினுடைய தன்மையினாலே தனது தன்மையிலிருந்து மாறுபட்டு அந்நிலத்தினுடைய தன்மையுடையதாகிவிடுவதைப்போல மக்களுடைய அறிவும் தாம் சேர்ந்துள்ள இனத்தினுடைய இயல்புகளுக்கேற்ப தனது தன்மையிலிருந்து மாறுபட்டு அந்த இனத்தினுடைய தன்மைகளை உடையதாகிவிடும்.