குறள்
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்து இல்
குறள் விளக்கம்
அறிவினாலும் ஒழுக்கங்களாலும் தகுதி உடையவர்களுடன் இடைவிடாத தொடர்புடையவனாக இருந்துகொண்டு தானும் அவ்வாறே அறிவுடன் கடைப்பிடிக்கும் வல்லமை உடையவனுக்குப் பகைவரால் செய்யக்கூடிய யாதொரு துன்பமும் இல்லை (பகைவரால் யாதொரு துன்பமும் தரஇயலாது என்பது கருத்து).