குறள்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று
குறள் விளக்கம்
பொருளை வழங்கவேண்டிய இடத்து வழங்காமலிருக்கும் பற்றுடைய மனமென்னும் பொருட்பற்றாகிய குற்றம், குற்றத்தன்மைகள் அனைத்திலும் ஒன்றாகக் கருதப்படுவது இல்லை. குற்றங்களிலெல்லாம் மேலான குற்றமாகக் கருதப்படுவதாகும்.