குறள்
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு
குறள் விளக்கம்
அறிவிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்கள் நட்பைப் பெறும் வகையில் அறிவுடைமை ஒருவனுக்கு அமைய வேண்டும். அது விரியும் தன்மையும் சுருங்கும் தன்மையும் இல்லாத (மாறாமல் நிலைத்திருப்பதே) அறிவு ஆகும்.